2008-10-09 15:31:31

கிறிஸ்தவர்கள் எதிர் கொள்ளும் சோதனைகள் அவர்கள் விசுவாசம் மெய்ப்பிக்கப்பட உதவுவதற்கே- திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


அக்09,2008. ஒவ்வொரு கிறிஸ்தவரும் பல்வகை சோதனைகளால் துன்புற வேண்டியிருக்கும், அது நம் விசுவாசம் மெய்ப்பிக்கப்பட உதவுவதற்கே என இன்று திருத்தந்தை 12ம் பத்திநாதர் இறந்ததன் 50ம் ஆண்டு நினைவுத் திருப்பலியை நிறைவேற்றிய போது மறையுரையாற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

1901ம் ஆண்டிலிருந்தே திருத்தந்தையர்கள் 13ம் சிங்கராயர், 10ம் பத்திநாதர், 15ம் பெனடிக்ட், 11ம் பத்திநாதர் என நான்கு திருத்தந்தையர்களின் கீழ் பணியாற்றிய பின்னர் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இரண்டாம் உலகப் போர் காலத்திலும் வல்லரசுகளின் பனிப்போர் காலத்திலும் மிகவும் உறுதியுடனும் பொறுமையுடனும் செயல்பட்டார் என திருத்தந்தை 12ம் பத்திநாதர் குறித்து தன் பாராட்டுதல்களை வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தை 12ம் பத்திநாதர், திருத்தந்தையின் தூதுவராக ஜெர்மனியில் பணியாற்றிய போது திருத்தந்தை 16ம் பெனடிக்டுடன் மிகச் சிறந்த முறையில் ஒன்றிணைந்து உழைத்தது குறிப்பிடும்படியானது எனவும் கூறினார் பாப்பிறை.

கொள்ளும் அவர்கள் விசுவாசம் மெய்ப்பிக்கப்பட -

திருத்தந்தை 12ம் பத்திநாதரின் கீழ் இயங்கிய திருச்சபை, இரண்டாம் உலகப் போரின் போது மதம், இனம் பாராமல் அனைவருக்கும் தன் பிறரன்புப் பணிகளை ஆற்றியதையும் எடுத்தியம்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.