2008-10-06 20:08:00

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைக்கு 15,000 பேர் பேரணி. 061008.


15000 பேர் டெல்லியின் ஜந்தர் மந்தர் அருகே கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரிசாவில் இழைக்கப்படும் வன்முறைக்கு உண்ணா நோன்பிருந்து எதிர்புத் தெரிவித்தனர் . ஜந்தர் மந்தரில் கூடி தங்கள் கவலைகளைத் தெரிவித்த கிறிஸ்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் அவரது சமாதியில் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்த விண்ணப்பம் ஒன்றை வைத்தனர். அதில் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்புக் கோரியிருந்தனர் . அதன் பிரதியைப் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் , காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பியுள்ளனர் . கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிட, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, கொல்வதாக அச்சுறுத்தப்பட்ட போதும் கிறிஸ்தவ மறையைவிட்டுப் போக முடியாது எனக் கூறிய புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த லால்ஜி நாயக் கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் . லால்ஜி நாயக் காந்தமால் மாவட்டத்தின் ருடாஞ்சியா கிராமத்தைச் சேர்ந்தவராவார் . செப்டம்பர் 30 ல் இந்நிகழ்ச்சி நடந்தது . மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட நாயக் அக்டோபர் முதல் தேதி காலமாகியிருக்கிறார். புவனேஸ்வரத்தைச் சேர்ந்த அருள்தந்தை மனோஜ், லால்ஜி நாயக்கை வேதசாட்சி எனக் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.