2008-10-03 20:35:02

அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குக என்கிறார் வத்திக்கான் அதிகாரி. 031008 .


அகில உலக அணுசக்தித் துறையின் பொது அமர்வு செப்டம்பர் 29 தேதியிலிருந்து அக்டோபர் 4 வரை வியன்னாவில் நடக்கிறது . வத்திக்கான் திருப்பீடத்தின் அலுவலகப் பணிகளின் தலைவர் பேராயர் தோமினிக் மாம்பர்டி அதில் கலந்து கொண்டார் . அவர் செப்டம்பர் 29 இல் அங்கு பேசியபோது போருக்கான ஆயதங்களைத்தயாரிக்க அணுசக்தியைப் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .அது மனுக்குலத்துக்கு நல்லது என்றார் .பல நாடுகள் அணுசக்தியின் அழிவுப்போக்கை நிறுத்திவிட உறுதிமொழி கூறியுள்ளதாகக் கூறினார் .உலகத்தின் பாதுகாப்பு அணு ஆயதங்களை நம்பி இருக்கக் கூடாது எனக் கூறிய பேராயர் அணு ஆயுதச் சோதனைகளைத் தடை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.