2008-09-29 15:36:20

திருத்தந்தை முதலாம் ஜான் பவுலின் தாழ்ச்சி எனும் பண்பைப் பின்பற்ற ஒவ்வொரு கத்தோலிக்கரும் கற்றுக் கொள்ள வேண்டும் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


செப்.29,2008 முன்னாள் திருத்தந்தை முதலாம் ஜான் பவுலின் தாழ்ச்சி எனும் பண்பைப் பின்பற்ற ஒவ்வொரு கத்தோலிக்கரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஞாயிறு மூவேளை செப உரையின் போது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் இறந்ததன் முப்பதாம் ஆண்டு ஞாயிறன்று நிறைவுற்றதை நினைவூட்டிய திருத்தந்தை, சுய நலத்தாலும் வீண்புகழ்ச்சியாலும் எதையும் ஆற்றாமல் தாழ்மை எனும் பண்பு கொண்டு பிறரைத் தன்னைவிட உயர்வானவராகக் கருதி நடத்த வேண்டும் என்ற புனித பவுலின் வார்த்தைகளை எடுத்தியம்பினார்.

திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் 33 நாட்களே பாப்பிறைப் பணியில் இருந்தாலும் அவர் மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பெற அதுவே போதுமானதாக இருந்தது என மேலும் அவர் கூறினார்.

இன்னும் புனித பவுஸ்தீனா கொவால்ஸ்காவின் ஆன்மீக வழிகாட்டியான அருட்திரு மிக்கேல் சொப்போஸ்கோவுக்கு நேற்று போலந்தில் முத்திப்பேறு பட்டம் வழங்கப்பட்டது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற சொப்போஸ்கோ, தெய்வீகக் கருணையின் பக்தி மாலையை ஊக்குவிப்பவராக இருந்தார் என்றார்.








All the contents on this site are copyrighted ©.