2008-09-28 20:15:50

ஒரிசாவில் தீவிரவாதிகள் அன்னை தெரசா சகோதரிகள் இல்லத்தைத் தாக்கினர்.2809.


 ஒரிசாவின் காந்தமால் பகுதியில் இம்மாதம் 25 ஆம் தேதி மாலையில் தீவிரவாதிகள் அன்னை தெரசா சகோதரிகளின் இல்லத்தைத் தாக்கி தீ வைத்துள்ளனர். சுகந்தா என்ற கிராமத்தில் இது நடந்துள்ளது. சகோதரிகளின் மாநில தலைமைச் சகோதரி ம.சூமா துன்புறுத்தியோருக்காகச் செபிப்பதாகக் கூறியுள்ளார் . அவர் அன்னை தெரசா இறப்பதற்கு முன்னர் கூறிய வாக்கை நினைவு கூர்ந்தார் . அன்னை தெரசா மரித்த பிறகு இவ்வுலகில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு எங்கெல்லாம் இருள் சூழ்ந்துள்ளதோ அங்கெல்லாம் கடவுளின் அன்பிலிருந்து வரும் ஒளியை ஏற்ற வருவதாகக் கூறியிருந்தார் . இந்தியாவில் கிறிஸ்தவர்கள் துன்புற்றாலும் வேத கலாபனையால் துயருற்றாலும் அன்னை தெரசாவின் வார்த்தைகள் ஆறுதல் அளிப்பதாகக் கூறியுள்ளார் . கடந்த செவ்வாய் இரவு 11 மணியளவில் தீவிரவாதக் கும்பல் 700 பேர் அப்பகுதியில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தையும் மீறி கத்திகள் , இரும்புக் கம்பிகள், கோடரி போன்ற ஆயுதங்களோடு வந்து சகோதரிகளின் வீட்டைத் தாக்கியுள்ளனர் . நல்ல வேளையாக அவ்வீட்டில் அப்போது எவரும் இல்லை . வீட்டை நொறுக்கிய தீவிரவாதிகள் அருகில் 5 ஏக்கர் பரப்பில் இருந்த அனைத்தையும் நாசம் செய்தனர் எனக் கூறப்படுகிறது. தீவிரவாதிகள் அருகில் இருந்த ஆலயத்தையும் தாக்கி நொறுக்கிச் சென்றுள்ளனர் . 26 ஆம் தேதி காலை 2.00 மணி வரையிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர் . 26 ஆம் தேதி இதுபற்றி ஒரிசா மாநில ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது . அவர் வருத்தம் தெரிவித்தாகத் தெரிகிறது. புபனேஸ்வரத்தின் பேராயர் ரபேல் சீனத் முன் வரிசையில் பணி செய்யும் அன்னைத் தெரசாள் சகோதரிகளுக்கு ஆபத்து அதிகமுள்ளாதகத் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.