2008-09-27 20:52:03

மத்தேயு ரிச்சியின் 400 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் . 270908 .


இயேசு சபையின் அருள் தந்தை மத்தேயு ரிச்சி சீனாவில் இன்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே மறைப்பணி செய்த இறைத் தொண்டர் . அவர் இத்தாலிய நாட்டினர். சீனாவிலும் இத்தாலியிலும் தந்தை ரிச்சிக்கு 400 ஆம் நூற்றாண்டு விழாக் கொண்டாடத் திட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன . மாபெரும் இயேசு சபையின் மறைபோதகரை வர்ணிக்க பல்வேறு அடைமொழிகள் வழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றன . உலகின் முதல் குடிமகன் , கலாச்சார மாற்றத்தின் முன்னோடி , சீனர்களுக்குள் சீனர் , வெளி உலகின் ஜி டாய் ஆசிரியர் , மேற்கிலிருந்து வந்த ஞானி , மாண்டரின் , ஐரோப்பாவுக்கும் சீனாவுக்கும் கலாச்சார உறவுக் கதவுகளைத் திறந்து வைத்த முதல் மனிதர் என்பன போன்ற எண்ணிலடங்காத புனைப் பெயர்கள் அவர் பெயரை அணி செய்கின்றன . அவர் மறை போதகர் மட்டுமல்லாது , தத்துவ ஞானி , கல்வியில் சிறந்த சான்றோர் , நில அறிவியல் , வானிலை அறிவியல் அறிந்த விஞ்ஞானி என்பனவற்றோடு மனித நேயம் மிக்கவராக இருந்திருக்கிறார் . 2010 ல் அவருடைய 400 ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ உள்ளன .








All the contents on this site are copyrighted ©.