2008-09-27 14:55:15

சுற்றுலா, சுற்றுச் சூழலையும் கலாச்சாரத்தையும் அழிக்கக் கூடாது - திருத்தந்தை


செப்.27,2008 இப்பூமியின் வளங்கள் பாகுபாடின்றி பயன்படுத்தப்படுவதற்கு அனைவரும் உழைக்குமாறு திருத்தந்தை இன்று கேட்டுக்கொண்டார்.

இன்று உலக சுற்றுலா தினம் கடைப்பிக்கப்படுவதை முன்னிட்டு இளையோர் சுற்றுலா மையம் மற்றும் சர்வதேச சுற்றுலா அலுவலகம் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை காஸ்தெல் கண்டோல்போவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மனிதன் தனது வாழ்வில் ஒழுக்கநெறி கோட்பாடுகளைக் கடைப்படிக்காமல் அவன் எதிர் கொள்ளும் சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் தீர்வு காண முடியாது என்றார்.

சுற்றுலா என்ற பெயரில் இயற்கையையும் இப்பூமியின் வளங்களையும் சுற்றுலா மேற்கொள்ளும் இடங்களின் கலாச்சாரங்களையும் அழிப்பவர்களை எச்சரித்த அவர், படைப்பைப் பொறுப்புடன் கையாளும் போது ஊழலற்ற பொருளாதாரமும் உறுதியான , சுற்றுலாவும் கிட்டும் என்பதை அனுபவம் கற்றுத் தந்துள்ளது என்றார்.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, ஏழ்மைக்கெதிரானப் போராட்டத்தில் சுற்றுலா முக்கிய அங்கம் வகிக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.