2008-09-26 13:22:49

செப்டம்பர் 26 – மறைசாட்சிகளான புனிதர்கள் கோஸ்மாஸ் தமியான்


வரலாற்றில் செப்டம்பர் 26 – மறைசாட்சிகளான புனிதர்கள் கோஸ்மாஸ் தமியானுக்கு இன்று விழா எடுக்கின்றது திருச்சபை. இரட்டைப் பிள்ளைகள் என்று கருதப்படும் இவர்கள் அரேபியாவைச் சேர்ந்த பக்தியுள்ள கிறிஸ்தவர்கள். துருக்கி நாட்டுச் சிசிலியா கடற்கரையருகே இலவசமாக பணம் வாங்காமல் மருத்துவத் தொண்டில் ஈடுபட்டிருந்தனர். இதனால் இவர்கள் காசுபணம் இல்லாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் தியாகங்கள், புனித வாழ்க்கை, குணமளிக்கும் சக்தி ஆகியவற்றினால் பலர் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அச்சமயத்தில் கொடுங்கோலன் பேரரசன் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கத் தொடங்கினான். அவ்வன்முறையில் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைப்படுத்தப்பட்டு தலைவெட்டப்பட்டு இறந்தனர். இவர்களின் புகழ் பரவத் தொடங்கியது. இந்தப் புனிதர்கள் கோஸ்மாஸ் தமியான் பெயரால் கிழக்கிலும் மேற்கிலும் பல ஆலயங்கள் கட்டப்பட்டன.

சிந்தனைக்கு – ஒருவன் மற்றவனை அழிக்க எப்போது திட்டம் போடுகிறானோ அப்போதே அவன் அழிவு தொடங்குகிறது.

 








All the contents on this site are copyrighted ©.