2008-09-25 19:59:34

கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதற்கு முந்நாள் இந்தியப் பிரதமர் எதிர்ப்பு.25 செப்.-08.


முந்நாள் இந்தியப்பிரதமர் திரு .எச் . டி . தேவகவுடா டெல்லி ராஜ்காட்டில் அமர்ந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் . பொது ஜனதா தளக் கட்சியின் தலைவராகிய அவர் அவருடைய கட்சியின் முக்கியப் பிரமுகர்களோடும் பல் சமயத் தலைவர்களோடும் டெல்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள ராஜ்காட்டில் காந்தி சமாதி அருகில் செப்.23 நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை கிறிஸ்தவர்களைத் தாக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் . கர்நாடக மாநிலம் , ஒரிசா , மத்திய மாநிலம் , கேரளம் மற்றும் இந்தியாவின் வேறு பகுதிகளில் நடந்து வரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை நடத்தி வரும் சங் பரிவார் இயக்கத்தினரைக் கண்டித்து இப்போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு அவரது ஆதரவைக் காட்டினார் . கர்நாடக மாநிலம் தீவிரவாதிகளின் மையமாக மாறி உள்ளது என இந்தியப் பிரதமர் திரு. மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதிய மடலில் கூறியுள்ளார் . கிறிஸ்தவர்களைத் தாக்கி வரும் பஞ்ரங்தால் இயக்கத்தை உடனடியாகத் தடைசெய்யுமாறும் , கர்நாடக மாநிலத்தில் குடியரசு ஆட்சியை அமல்படுத்துமாறும் அம்மடலில் அவர் மேலும் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.