2008-09-23 14:48:27

உலகில் இடம் பெறும் கிறிஸ்தவத்துக்கு எதிரான விரோதப் போக்கு குறித்து இத்தாலிய ஆயர்கள் கவலை


செப்.23,2008. இந்தியா, பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் விரோதப் போக்குகள் குறித்து இத்தாலிய ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உரோமையில் இத்தாலிய ஆயர்கள் தொடங்கியுள்ள கூட்டத்தில் பேசிய இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பாக்னாஸ்கோ, அநீதியான தாக்குதல்களால் உலகில் கிறிஸ்தவர்கள் துன்பப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகள் கலாச்சாரத்திற்கும், உண்மையான ஜனநாயகத்திற்கும் சமய சுதந்திரம் இன்றியமையாதது என்றும் குறிப்பிட்ட அவர், ஒரிசாவின் காந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அநீதியாகத் தாக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்தார்.

சர்வதேச அளவில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் ஜனநாயக இந்தியாவில் இத்தகைய வன்முறைகள் எப்படி நடக்க இயலும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் வன்முறைகள் இடம் பெற்ற அதே நாட்களில் பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்களுக்கெதிரான சகிப்பற்ற தன்மைச் சம்பவங்கள் நடந்தன என்றும் கர்தினால் பாக்னாஸ்கோ கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.