2008-09-22 20:05:57

சமயச் சுதந்திரத்தை இந்தியாவில் உறுதி செய்க என்கிறார் கர்தினால் ஆஞ்சலோ பக்னாஸ்கோ .220908.


இந்தியாவில் நிகழும் வன்முறை மதச் சுதந்திரத்துக்கு எதிராக இழைக்கப்படுகின்றன . இந்தியாவிலும் மற்றும் பாகிஸ்தான் , ஈராக்கிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துவரும் நிகழ்ச்சிகள் மனித உரிமைகளுக்கு சமயச்சுதந்திரம் மூலைக்கல்லாக இருப்பதை வலியுறுத்துகிறது என இத்தாலிய ஆயர்கள் குழுவின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பக்னாஸ்கோ தெரிவித்துள்ளார் . கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கிளம்பியுள்ள வன்முறைகள் நடைமுறையில் மதச்சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய பிரச்சனையை உருவாக்கியுள்ளன என்று கர்தினால் கூறியுள்ளார் . உரோம் நகரில் இத்தாலிய ஆயர்குழுவின் நிரந்தர உறுப்பினர் குழுவின் கருத்தரங்கு செப். 22ல் தொடங்கியது . அதில் தொடக்க உரையின் போது கர்தினால் இவ்வாறு தெரிவித்தார் . ஒரிசாவின் காந்தமால் பகுதியில் நடந்த கொலைக்குக் காரணம் கிறிஸ்தவர்கள் எனப் பழி சுமத்தி கிறிஸ்தவர்களைத் தாக்கி வருகிறார்கள் . கொலைக்கு மற்றவர்கள் பொறுப்பேற்று பின்னர் அதை அவர்கள் மறுத்திருந்தாலும் , அங்கு நடந்த கொலைக்குக் கிறிஸ்தவர்களே காரணம் எனக் கூறி வன்முறை நடந்து வருகிறது. இதன் விளைவாக கொலைகளும் கற்பழித்தலும் , ஆலயங்களையும் கிறிஸ்தவ நிறுவனங்களையும் , அருள் சகோதரிகள் இல்லங்களையும் கருணை இல்லங்கள் , பள்ளிகளையும் தாக்கி சேதப்படுத்தி வருகின்றார்கள் . பல ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளார்கள் . தாழ் நிலையிலிருப்போர்க்கு கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆற்றி வரும் தொண்டுகள் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் உருவாக்கி உள்ளது . உதவி பெறுகின்றவர்கள் மதம் மாறலாம் என்பதற்காக அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது என்பது எவ்வாறு நியாயமாகும் என கர்தினால் வினவினார் . தொடர்ந்து நடக்கும் வன்முறைகளுக்குத் தீர்வில்லாது , பாதுகாப்பில்லாது கிறிஸ்தவர்கள் அங்கு தவிக்கும் இவ்வேளையில் தீயன செய்வோர் தண்டிக்கப்படாமல் இருப்பதும் , உலகச் செய்தி ஊடகங்கள் மெளனம் காப்பதும் சட்டம் புறக்கணிக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது . திருத்தந்தை ஆகஸ்ட் 27 ல் தெளிவாக இதுபற்றிப் பேசி , துயருறும் மக்களுக்கு தமது வருத்தங்களைத்தெரிவித்தார் , என கர்தினால் பகனாஸ்கோ கூறியுள்ளார் . உடனடியாக இந்திய அரசாலும் , சான்றோர்களாலும் பொதுமக்களாலும் மதச் சுதந்திரம் காக்கப் பட வழி பிறக்க வேண்டும் என வேண்டியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.