2008-09-20 15:53:18

செப்.21. உலக அமைதி தினம்


செப்.20, 2008. சண்டை, வறுமை, பசி ஆகியவற்றுக்கெதிராய்ப் போராடவும், எல்லாருக்கும் மனித உரிமைகள் கிடைக்கவும் உலகத் தலைவர்களும் குடி மக்களும் சேர்ந்து செயல்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அழைப்புவிடுத்துள்ளார்.

செப்.21ந்தேதி நாளை உலக அமைதி தினம் கடைப்பி்டிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான், வன்முறையற்ற சமுதாயத்தைக் கட்டி எழுப்ப அழைப்புவிடுத்துள்ளார்.

மனித உரிமைகள் காக்கப்டுவது அமைதிக்கு அவசியம், எனினும் உலகில் பலரின், குறிப்பாக ஆயுதம் தாங்கிய சண்டைகளின் போதும் சண்டைகளுக்குப் பின்னும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

எனவே மனித உரிமைகள் குறித்த சர்வதேச சாசனம் காக்கப்டுவதற்கு அனைவரும் உறுதி எடுக்குமாறும் பான் கேட்டுள்ளார்.

உலகளாவிய போர் நிறுத்தம் மற்றும் அகிம்சை தினமாக உலக அமைதி தினம் 1981இல் ஐ.நா.பொது அவையால் முதலில் உருவாக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.