2008-09-20 15:50:44

இந்தியாவில் இடம் பெறும் கிறிஸ்தவத்துக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை பிரதமருக்கு வேண்டுகோள்.


செப்.20, 2008. இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வரும் கிறிஸ்தவத்துக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்குப் பிரதமர் மன்மோகன்சிங் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கத்தோலிக்கத் திருச்சபை பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரிசாவின் கட்டாக் புவனேஸ்வர் பேராயர் இரபேல் சீனத், டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சஸ்சாவோ, இந்திய ஆயர் பேரவை பேச்சாளர் அருட்திரு பாபு ஜோசப் ஆகியோர் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து விண்ணப்ப மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

காந்தமால் மாவட்டத்தில் வன்முறை நடைபெற்ற போது தாங்கள் சமர்ப்பித்த முந்தைய மனு பற்றியும் குறிப்பிட்டுள்ள அவர்கள், வன்முறை அட்டூழியங்கள் நிறுத்தப்படுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், குடிமக்களின் வாழ்வு சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு அவசர கால நிலையை அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.

செப்டம்பர் 11ம் தேதியிலிருந்து நடத்தப்பட்ட வன்முறைகளினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் சேதங்களையும் அம்மனுவில் திருச்சபை பிரதிநிதிகள் பட்டியலிட்டுள்ளனர்








All the contents on this site are copyrighted ©.