2008-09-20 15:49:32

இக்காலத்திலும் ஆண்களும் பெண்களும் இறைவனைத் தேடுவதில் வேகம் காட்டுகிறார்கள்


செப்.20, 2008, பெனடிக்ட் துறவு சபைகளின் கூட்டமைப்பு நடத்தும் சர்வதேச மாநாட்டின் பிரதிநிதிகளை இன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஆண்களும் பெண்களும் இன்றைய நமது காலத்திலும் இறைவனைத் தேடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார்.

கிறிஸ்துவின் அன்பிலும், அவரின் இரக்கத்திலும் அவரின் பிரசன்னத்தின் அடையாளங்களை அறிவதற்குக் கற்றுக் கொள்ளவும் ஆவல் கொள்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

இதனால், ஆன்மீக, மனித மற்றும் கலாச்சாரத்தில் அனுபவம் பெற விரும்புவோர்க்குத் தியான யோக இல்லங்கள் திறந்துவிடப்பட வேண்டும், அவர்களை வரவேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எனினும் இதில் தியான யோக இல்லங்களின் வாழ்வுமுறை பாதிக்கப்படாதவாறு சமநிலை காக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.



உண்மையான சகோதரத்துவ வாழ்விலும், ஆழமான செபத்திலும், படிப்பிலும், வேலையிலும, கடவுளின் சாயலான பிறருக்கு இனிய வரவேற்பு கொடுப்பதிலும் திறன் கொண்ட ஒரு குழு, இதயங்களில், குறிப்பாக இளையோரில் தியான யோக வாழ்வுக்கான அழைத்தலுக்கு வித்திட முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.

கலாச்சார வெற்றிடம் தெரியும் இன்றைய நமது காலத்தில் மக்கள் கடவுளைச் சந்திப்பதற்கு பெனடிக்ட் துறவு சபைகளின் துறவிகள் உதவுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.