2008-09-19 19:50:46

எத்தியோப்பிய நாட்டின் பசிப்பிணி போக்க அமெரிக்க சிஆர்எஸ் உதவி. 19 செப்.-08 .

 


எத்தியோப்பியாவில் வறட்சி காரணமாகப் பஞ்சம் நிலவுகிறது . அமெரிக்காவின் தொண்டு நிறுவனம் சிஆர்எஸ் பஞ்ச நிவாரணத்துக்கு 220 கோடி ரூபாய்களை அளிக்க ஒப்பந்தம் செய்துள்ளது . இதைத் தெரிவித்த அந்நிறுவனத்தின் எத்தியோப்பியாவுக்கான பிரதிநிதி லேன் பங்கர்ஸ் ஒரு கோடி ரூபாயை உடனடியாக கத்தோலிக்க மறைமாவட்டம் வழியாகவும் அன்னை தெரசாவின் பிறரன்புச் சேவை சகோதரிகள் வழியாகவும் மக்களின் பசிப்பிணியைப் போக்க , முக்கியமாகக் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிப் பெண்டிருக்கும் முதியோருக்கும் வழங்க அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார் . எத்தியோப்பியாவில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாட்டில் உள்ளதால் மற்ற நாடுகளிலிருந்து உணவுப்பொருட்களைச் சேகரித்து எத்தியோப்பியாவுக்குக் கொண்டு செல்வது சிரமமாக உள்ளதென சிஆர்எஸ்ஸின் பிரதிநிதி லேன் பங்கர்ஸ் மேலும் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.