2008-09-17 16:13:29

மில்லேனேய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவாக செபம், உண்ணா நோன்பு


செப்.17, 2008. மில்லேனேய வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய ஐ.நா. கருத்தரங்குக்கு ஆதரவு தரும் நோக்கில் இவ்வெள்ளியை செபம் மற்றும் உண்ணா நோன்பின் நாளாக அனுசரிக்க வேண்டும் என இங்கிலாந்து கர்தினால் கோர்மாக் மார்ப்பி ஒக்கானர் அழைப்பு விடுத்துள்ளார்.

உலக வளர்ச்சித் திட்டங்களை 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து ஆராயவும், அர்ப்பணங்களைப் புதுப்பிக்கவும் முனையவுள்ள ஐ.நா. கருத்தரங்கு இம்மாதம் 25ந்தேதி துவங்கவுள்ளது பற்றிக் குறிப்பிட்ட கர்தினால், உலகின் ஏழைகளுக்கான செபம் மற்றும் உண்ணா நோன்பின் நாளாக இவ்வெள்ளியைக் கடைப்பிடிக்குமாறு கத்தோலிக்கர்களை விண்ணப்பித்துள்ளார்.

ஆப்ரிக்காவின் தென்மண்டல நாடுகளில் பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள மக்களின் துன்பங்களை நேரில் கண்டதாக உரைத்த அவர், உலகின் ஏழ்மை நிலைகளை ஒன்றிணைந்து அகற்ற முடியும் எனவும் நம்பிக்கையை வெளியிட்டார்







All the contents on this site are copyrighted ©.