2008-09-15 19:02:48

லூர்துநகரில் நற்கருணைப் பவனி . 14 செப்.-08.


அன்னை மரியாள் காட்சி கொடுத்த கெபிக்கு எதிர்ப்புறத்தில் கேவ் ஆற்றுக்கு அப்பால் 9 ஹெக்டேர் பரப்பளவில் திறந்த வெளி ஒன்று உள்ளது . அங்குத்தான் லூர்தன்னை காட்சி கொடுத்த 150 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தின் திருச்சிலுவை மகிமை விழாத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடந்தது . அது திருத்தந்தை பிரான்ஸ் நாட்டு ஆயர்களுக்கு உரை வழங்கிய பாதிப்பிறை வடிவிலான புனித பெர்நதெத் தேவாலயத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது . லூர்து நகரில் நாள்தோறும் மாலை 4.30 மணிக்கு திவ்ய நற்கருணைப் பவனி நடைபெறும் . ஆயரோ , குருவானவரோ அழகான கதிர் பாத்திரத்தில் நற்கருணையை ஏந்திச் செல்வார் . குருக்களும் இறை மக்களும் செபம் செய்துகொண்டு பவனியாக முன்னே செல்வார்கள் . நற்கருணைப்பவனியின் இறுதியில் தேவநற்கருணை ஆசீர் வழங்கப்படும் . வளாகத்தில் உள்ள திருப்பீடத்தில் திருப்பவனியின் முடிவில் கலந்து கொண்ட திருத்தந்தை மறையுரையும் நற்கருணை ஆசீர்வாதமும் வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.