2008-09-15 20:28:01

நோயுற்றோருக்காகச் சிறப்புத் திருப்பலி . 15.செப்.-08 .


திங்கள் காலை 09.30 மணிக்கு செபமாலை அன்னை பசிலிக்காவில் நலம் குன்றியோருக்காகத் திருத்தந்தை சிறப்புத் திருப்பலி நிகழ்த்தினார் . லூர்து நகரில் மூன்று அழகான பசிலிக்காக்கள் உள்ளன . அமல உற்பவி பேராலயம் . இது அன்னை காட்சி கொடுத்த மலையில் உயரத்தில் உள்ளது . அதற்குக் கீழே மலையின் முன்புறத்தில் செபமாலை அன்னை பசிலிக்கா உள்ளது . அமல அன்னையின் வேண்டுகளுக்கிணங்க கி.பி. 1858 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2 ஆம் தேதி ஆலயம் ஒன்று எழுப்பட்டது . அது செபமாலை அன்னை பசிலிக்காவுக்கு நேர் கீழே மலையில் உள்ளது . இந்த மூன்று முக்கிய ஆலயங்களும் அன்னை மரியாள் காட்சி கொடுத்த இடத்திற்கு மேலே உள்ளன . வெளியில் சிறிது தூரத்துக்கு அப்பால் பூமிக்கடியில் புனித பத்தாம் பத்தினார் பசிலிக்கா உள்ளது . செபமாலை அன்னையின் ஆலயம் செல்ல சாய்தள சருக்குப் பாதைகள் இருபுறமும் உள்ளன . அமல அன்னை பசிலிக்கா மேதகு லூயிஸ் ஜோசப் ஷான் லியோன் குஷோ என்பவரால் கி.பி. 1889 ல் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் தேதி தொடங்கப்பட்டது . ரீம்ஸ் நகரப் பேராயர் , கர்தினால் பென்வா லாங்கினியூ என்பவரால் அக்டோபர் மாதம் 06ஆம் தேதி 1901 ஆம் ஆண்டு அர்சிக்கப்பட்டது . செபமாலை அன்னைப் பேராலயம் திருத்தந்தை 11 ஆம் பத்தினாதரால் செப். 24, 1926 ல் கட்டி எழுப்பப்பட்டது . இதில் 1500 பேர் அமரமுடியும் . இன்றைய திருப்பலி புனித செபமாலை அன்னை ஆலயத்தின் முன்புறமுள்ள வளாகத்தில் நோயுற்றோர் நலம் பெற ஒப்புக் கொடுக்கப்பட்டது . அங்கு ஏறத்தாள 80,000 பேர் அமரமுடியும் .








All the contents on this site are copyrighted ©.