2008-09-15 16:07:33

திருமணத்தின் முறிவுபடாத தன்மையைக் காப்பதில் திருச்சபை உறுதியாய் இருக்கிறது


செப்.15, 2008. கத்தோலிக்கத்தின் மூத்த மகள் என அழைக்கப்படும் பிரான்சின் 170, கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, பிரான்சில் திருச்சபை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி எடுத்துரைத்தார். இதில் சில தலைப்புகள் பற்றி ஆயர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் ௬றி மறைக் கல்வி போதனைக்கு அவர்கள் கொடுத்து வரும் முக்கியத்துவம் பற்றி முதலில் தமது கருத்துக்களை முன்வைத்தார்.

திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்கள் கடவுள் மீதான தாகத்திலும் வாழ்வைப் புரிந்து கொள்வதிலும் வளர வேண்டுமென்றால் அதற்கு மறைக் கல்வி மிகவும் முக்கியமானது. இம்மறைக்கல்வியை நன்கு கற்றுக் கொடுப்பதற்கு ஆயர்களுக்கு உடன் உழைப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். எனவேதான் குருத்துவ மற்றும் துறவற அழைத்தலில் முன்பைவிட தற்பொழுது மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். குருத்துவம் திருச்சபைக்கு இன்றியமையாதது. குருக்கள், கடவுள் திருச்சபைக்குக் கொடுக்கும் கொடைகள். திருச்சபைக்குப் பணி செய்வதில் ஒவ்வொரு குருவும் மகிழ்வை அனுபவிக்க வேண்டும். குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் வியான்னி ௬ரேதாஸ் பிறந்த இந்த பிரான்ஸ் மண்ணில், குருக்களுக்கு ஆயர்களின் அன்பும் ஊக்கப்படுத்துதலும் தேவைப்படுகின்றது என்ற திருத்தந்தை, திருவழிபாட்டின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார். திருச்சபையில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கின்றது, இங்கு ஒவ்வொருவரும் எந்த விதிவிலக்கும் இன்றி நல்லுணர்வோடு வாழ வேண்டும் என்ற திருத்தந்தை, தங்களது நன்னெறிக் ௬றுகளை இழந்து வாழும் இன்றைய சமூகங்கள் எதிர்நோக்கும் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வு பற்றி, குறிப்பாக திருமணத்தை முறித்து மீண்டும் திருமணம் செய்து கொள்வோர் மீதான திருச்சபையின் அக்கறை குறித்த தமது சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டார்.

RealAudioMP3 மறுமணம் புரியும் கத்தோலிக்கர்களுக்குத் திருச்சபை அணுக முடியாத ஒன்று அல்ல, மாறாக அது அவர்களைப் பாசத்துடன் அரவணைத்துச் செல்லவே முயற்சிக்கின்றது, அதேவளை, கிறிஸ்துவின் விருப்பத்திற்கு மாறாகச் செல்ல விரும்பாத திருச்சபை, திருமணத்தின் முறிவுபடாத தன்மையைக் காப்பதில் உறுதியாய் இருக்கிறது. இதனாலே முறைதவறி சேர்ந்து வாழ்வோரை ஆசீர்வதிக்க எடுக்கப்படும் முயற்சிகளையும் திருச்சபை அனுமதிப்பதில்லை. ஆயர்கள் இதில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை தான் அறிந்தே இருப்பதாகவும் ஒரு நல்ல நேரத்தில் அவர்கள் இதற்கான தீர்வைக் காண்பார்கள் என்பதில் சந்தேகேம இல்லை எனவும் கூறினார் திருத்தந்தை. பின்னர் இளையோரை உருவாக்குவதில் ஆயர்கள் எடுத்து வரும் முயற்சிகளையும் குறிப்பிட்டார்.



நமது வலிமையானது கிறிஸ்து நம்மிடம் என்ன விரும்புகிறார் என்பதைப் பொருத்து இருக்கின்றது என்று கர்தினால் ஜான் மரி லுஸ்திஜர் சொல்வது வழக்கம். ப்ரெஞச் மக்களின் தேசிய பற்றையும் கண்டு இரசித்திருக்கிறேன். தலத்திருச்சபைக்கும் அரசுக்குமிடையேயும் பிற சமயங்களுக்கு இடையேயும் உரையாடல் அவசியம். மனிதன் தனது பயத்திலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுதலை பெற வேண்டிய தேவையில் எப்பொழுதும் இருக்கிறான். கடவுள் தனது எதிரி அல்ல, மாறாக தன்னைப் படைத்தவர் என்பதை மனிதன் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற திருத்தந்தை, ப்ரெஞ்ச் ஆயர்கள் ஆற்றி வரும் அரும் மேய்ப்புப் பணிக்குத் தமது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து தமது அப்போஸ்தலிக்க ஆசீருடன் உரையை நிறைவு செய்தார்.





உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் பிரசன்னமாய் இருக்கும் கடவுளின் அதிசயங்களை எடுத்துச் சொல்லுங்கள் - திருத்தந்தை



செப்.15, 2008. திருநற்கருனை பவினியின் இறுதியில் திருத்தந்தை ஆற்றிய உரை, இயேசு மனிதர் மீது வைத்துள்ள அளவற்ற அன்பை எடுத்துரைப்பதாய், அவரிடம் செபிப்பதாய் இருந்தது.

ஆண்டவராகிய இயேசுவே, உம்மை அன்பு செய்கிறோம். உமது அன்பில் வளருவதற்கான வழிகளைத் தேடுகிறோம். எங்கள் துன்பத்திலும் இன்பத்திலும் உமது அன்பில் எங்களை ஏற்றுக் கொள்ளும். புனித கன்னி மரியே உமது திருமகனை அன்பு செய்ய உதவும். திருஅப்பத்தை நாம் தியானிக்கும் போது இயேசு கிறிஸ்துவின் மறு உருவான அவரது உயிர்த்த உடல் பற்றித் தியானிக்கிறோம். திருநற்கருனை வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவாகவும் இருக்கின்றது. கிறிஸ்து நம்மில் வாழும் போது, நமக்கு வேறென்ன தேவை. நமக்கு என்ன குறைபடுகிறது. அன்பு சகோதர சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பதில் தொடர்ந்து நிலைத்திருங்கள். அமைதியில் நிலைத்திருந்து பின்னர் உலகுக்கு அறிவியுங்கள். நாம் அறிந்திருக்கும் ஒன்று பற்றி மௌனம் காக்க முடியாது. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் உலகின் ஒவ்வொரு இடத்திலும் பிரசன்னமாய் இருக்கும் கடவுளின் அதிசயங்களை அகில உலகுக்கும் எடுத்துச் சொல்லுங்கள் எனறுரைத்து இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

 








All the contents on this site are copyrighted ©.