2008-09-13 15:10:26

நாம் ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருக்கும் உண்மை என்பது கிறிஸ்துவே – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


செப்.13, 2008. சிட்னியில் அண்மையில் இடம் பெற்ற உலக இளையோர் தினத்தை நினைவு ௬ர்ந்த திருத்தந்தை, ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்விலும் தூய ஆவியின் முக்கியத்துவம் அந்நாட்களில் பல இளையோரால் மீண்டும் கண்டு கொள்ளப்பட்டது என்றார். அன்பு காட்டவும் அன்பு காட்டப்படவும் விரும்புவோர் அதனை இறைவனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். உண்மையான அன்பென்னும் கொடையைப் பெற்றுக் கொள்ள, நம் இதயங்களைத் திறப்பவர் அன்பையே உருவாய்க் கொண்டிருக்கும் தூய ஆவியே. நாம் ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருக்கும் உண்மை என்பது கிறிஸ்துவே. அவரைக் கண்டு கொள்ள, தூய ஆவியாரிடம் நம்மைக் கையளிப்போம்.

விசுவாசத்தின் அனைத்து உண்மைகளையும் ஆழமாகப் புரிந்து கொள்ள உறுதிபூசுதல் என்னும் திருவருட்சாதனத்தின் முக்கியத்துவம் குறித்து நாம் தியானிக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரிடமும் இயேசுவைக் குறித்து எடுத்துரைக்க வேண்டும். இளையோரே நீங்கள் கடவுளின் சாட்சிகளாக இருங்கள்.

புனித பவுலுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இவ்வாண்டில் அவர் திருச்சிலுவை பற்றிக் ௬றியிருப்பதை நினைவு ௬ர்வோம் என எடுத்துரைத்து விளக்கமளித்த திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் கழுத்தில் அணியும் திருச்சிலுவை வெறும் அழகுக்கு அல்ல, அது நம் விசுவாசத்தின் விலைமதிப்பற்ற அடையாளம் என்றார். இச்சிலுவை இயேசு நமக்காக சிலுவையில் அறையுண்டு உயிர் நீத்த முடிவற்ற அன்பைக் குறித்து நிற்கின்றது என்ற திருத்தந்தை, தூய ஆவி அன்பின் மறையுண்மைகளைப் புரிந்து கொள்ள உதவுவாராக என்றார்.








All the contents on this site are copyrighted ©.