2008-09-13 21:17:50

திருத்தந்தையின் பிரான்ஸ் திருப்பயணத்தில் பெர்நார்தின் கல்லூரி .13செப்.-08.


 திருத்தந்தையின் பிரான்ஸ் நாட்டுத் திருப்பயணத்தின் முதல் நாள் மாலை 05.00 மணிக்கு இந்திய நேரம் இரவு 08.30 மணிக்கு திருத்தந்தை வத்திக்கான் திருப்பீடத்தின் பிரான்ஸ் நாட்டு்க்கான தூதரக மாளிகையில் பிரெஞ்ச்சுக் கலாச்சாரப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அவர்களில் எபிரேய மொழி பேசும் இஸ்ராயேல் நாட்டு யூதர்களும் இஸ்லாமியத் தலைவர்களும் இருந்தனர் . அவர்களுக்குத் திருத்தந்தை ஓர் சிற்றுரை வழங்கினார் .



வெள்ளி மாலை 5.30 மணிக்கு இந்திய நேரம் இரவு 9.00 மணிக்கு பாரிஸ் மாநகரின் வரலாற்றுப் புகழ் மிக்க பெர்நார்தின்ஸ் கல்லூரியில் திருத்தந்தை அகில உலகச் சான்றோர்கள் கூடியிருந்த மன்றத்தில் சிறப்பு மிக்க உரை நிகழ்த்தினார் . பெர்நார்தின்ஸ் கல்லூரி கலைத்திறம் மிக்க ஒரு கலைக்கோயில் என்று கூறக்கூடிய பெருமை கொண்டது .கி.பி. 1090-1153 ல் வாழ்ந்தவர் புனித பெர்நார்து கிளேர்வோ என்பவர் . அவர் ஆன்மீகத்தையும் அறிவையும் பெருக்க முக்கியமாக குருக்களுக்கும் துறவியருக்கும் இறையறிவை வளர்க்க ஒரு கல்லூரியை நிறுவத் திட்டமிட்டார் . புனித பெர்நார்து கிளேர்வோ கண்ட கனவை நனவாக்கி கண்கொள்ளாக் காட்சிப் பொருளாக , கலையும் அழகும் இழையோட எழுப்பட்ட கலைக்கோயிலாக பெர்நார்தின்ஸ் கல்லூரி பாரிசில் குடிகொண்டுள்ளது . அந்த இருண்ட இடைக்காலத்தில் ஒளிமிக்கதாக உருவாக்கிய பெருமை மன்னர் 9 லூயிஸின் சகோதரர் அல்போன்ஸையும் , திருத்தந்தை 12 ஆம் பெனடிக்டையும் சார்ந்ததாகும் . கடந்த 5 ஆண்டுகளாக இக்கல்லூரி பழுது நீக்கப்பட்டு மெருகூட்டப்பட்டு இப்பொழுது புத்தொளியோடு மிளிர்கிறது .








All the contents on this site are copyrighted ©.