2008-09-13 14:14:33

அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பேச்சு வார்த்தையில் ஈடுபட பொலிவிய ஆயர்கள் அழைப்பு


செப்.13,2008. பொலிவியாவில் எதிர் கட்சியின் பலம் ஓங்கியிருக்கும் அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் கனிம வளங்களைப் பகிர்தல் குறித்த பிரச்சனை தொடர்பாக மோதல்களும் ஆக்ரமிப்புகளும் தொடர்ந்து இடம் பெற்று வரும் வேளை, நாட்டின் அரசியல் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தினமும் வன்முறை பரவி வரும் வேளை, இது நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கக் ௬டும் என்ற நிலை தெரிவதாகக் ௬றிய ஆயர்கள், வன்முறையைப் புறக்கணித்து வாழ்வையும் சட்டத்தையும் மதிப்பது உரையாடலுக்கு மிகவும் தேவையானது என்று குறிப்பிட்டுள்ளனர்.

பொலிவியாவின் பொது நலனைக் கருத்தில் கொண்டு உரிமைகளின் சட்டத்தைப் பாதுகாத்து சட்டத்துக்கு உடன்பட்ட கலாச்சாரத்தை ஊக்குவித்து உறுதியான ஜனநாயகத்தை அமைப்பதற்கு முயற்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.