2008-09-12 20:44:14

மதத்தை ஒரம் கட்டும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் விபரீத விளைவுகளைத் தரும் என்கிறார் திருத்தந்தை . 120908.


81 வயதுள்ள திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவரது பிரான்ஸ் நாட்டின் 4 நாள் திருப்பயணத்தின் முதல் நாள் 13 ஆவது நூற்றாண்டு கட்டிடத்தில் நுழைந்தபோது அனைவரும் நின்றுகொண்டு திருத்தந்தையை வரவேற்றனர் . அவர் சான்றோர்களுக்கு 13 நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பெர்நார்தின் கல்லூரியில் உரை நிகழ்த்தினார் . ஆர்வமாகத் தயாரித்த அந்த உரை பகுத்தறிவுக்கும் தெய்வ நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பை விளக்குவதாகும். வரலாற்றின் இடைக்காலத்தில் தவமிருந்து செபித்தும் மெய்யறிவும் பெற்ற துறவியர்கள் ஐரோப்பாவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களைப் போன்றே ஆண்டவனைத் தேடுதல் இன்றும் அவசியமாகிறது. பலருக்குக் கடவுள் புரியாதவராகவும் வாழ்க்கையில் இல்லாத ஒருவராகவும் நினைக்கப்படும் நிலையில் அவரைத் தேடுவதும் அவரைக் காண ஆவல் கொள்வதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்று உரைத்தார் திருத்தந்தை . கடவுளை நாம் நமது உள் உணர்வுக்குரிய ஒருவராகவோ மெய்யறிவின்றியோ காண விழைவது புலனறிவுக்குச் சரணமடைந்து ,உண்மையை உணரும் வாய்ப்புக்களை ஒதுக்கிவிடுதலாகும் . இது மனுக்குலத்துக்கு பேராபத்தைத் தரக்கூடியதாகும் . இடைக்காலத் துறவியரின் மரபும் பாரம்பரியமும் இறைவார்த்தையை ஊக்குவித்தது. கிறிஸ்தவர்களை இறைவார்த்தையோடு உரையாடச்செய்தது , என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . இறைவாக்கு வல்லமை மிக்கது எனக் கூறினார் திருத்தந்தை. இன்றைய ஐரோப்பியக் கலாச்சாரம் தன்னுரிமை என்பது கடமைகளைப் புறக்கணிப்பது என்றால், அது பேராபத்து என்று கூறிய திருத்தந்தை , அவ்வாறு நடப்பது தீவிரவாதத்துக்கும் விதிக்கட்டுப்பாடின்றி மனம்போன போக்கில் வாழவும் வழிவகுக்கும் என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . செபத்தைப்போலவே உழைப்பும் நம்மைக் கடவுள் சாயலில் மாற்றுகிறது என்றும் விளக்கிக்கூறினார் திருத்தந்தை .








All the contents on this site are copyrighted ©.