2008-09-07 20:48:29

திருத்தந்தையின் சார்தீனியாத் திருப்பயணம். 07செப்.


07செப்.-08 ஞாயிறு அன்று திருத்தந்தை சார்தீனியா சென்றிருந்தார் . சார்தீனியாவின் போனாரியா மாதாவின் நூறாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார் . செப். 08 அன்னைமரியின் பிறந்த நாள் விழா . அதற்கு முந்தைய நாள் அங்குச் சென்ற திருத்தந்தை இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியின் முக்கிய பங்கு பற்றிக் கூறினார். உலகில் உள்ள அனைத்துத் தாய்மார்களுக்கும் மரியாள் துணையாக , ஆறுதல் தருபவராக , நம்பிக்கையாக இருப்பாராக எனத் திருத்தந்தை கூறினார் . அன்னையின் எடுத்துக்காட்டு துணையாக இருந்து உங்களை பணியகத்திலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் நற்செய்திப் பணியினைத் தொடரவும் , வளர்ச்சிப் பணிக்கு வேண்டிய ஆற்றலும், ஊக்கமும் அருள்வாராக என்றும் கூறினார் . போனாரியா மாதாவின் திருத்தலம் சார்தீனியாத்தீவின் காலியாரிக்கு அருகில் உள்ளது. இன்று காலை தொடங்கிய திருப்பயணம் மாலை நேரத்தோடு முடிந்தது. ஒரு இலட்சம் மக்கள் வழிபாட்டில் பங்கேற்றேனர். கடலில் படகுகளிலிருந்தும் மக்கள் திருதந்தை ஆற்றிய வழிபாட்டில் கலந்து கொண்டார்கள் . மூவேளை செபத்தின்போது நாசரேத்தின் திருக்குடும்பம் நமது மீட்பின் தொட்டில் என்றார் திருத்தந்தை . அன்னை மரியாவுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துக் கொடைகளும் அவருடைய குழந்தைகளாகிய நமக்கும்தான் சேர்த்து வழங்கப்பட்டது என்றார் திருத்தந்தை . ஆண்டவர் இயேசு முன் குறித்து வைக்கப்பட்டபோது அன்னை மரியும் மனுக்குலம் முழுவதும் முன்குறித்து வைக்கப்பட்டதாகக் கூறினார் . நாமெல்லாம் ஆண்டவர் இயேசுவால் தத்தெடுக்கப்பட்டவர்கள் , என்று மேலும் கூறினார். தூய சூசையப்பரின் புகழையும் திருத்தந்தை எடுத்துக் கூறினார். அவருடைய ஆழ்ந்த இறைப்பற்றையும் நேர்மையையும் புகழ்ந்துரைத்தார் . கடவுள்மீது அன்பும் அவருக்குக் கீழ்ப்படிய மன உறுதியும் கொண்டிருந்தார் எனவும் திருத்தந்தை புகழ்ந்துரைத்தார் . சார்தீனியாவை 100 ஆண்டுக்காலமாகக் காத்து வந்த அன்னை மரியாள் புதிய நற்செய்திப்பணிக்கு நட்சத்திரமாக விளங்குவதாக் கூறினார் . மூவேளை செபத்தின் முடிவில் கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கயிட்டி நாட்டு மக்களுக்காக வருத்தம் தெரிவித்து செபித்தார். பிற்பகலில் அங்குள்ள குருமடத்திற்குச் சென்று குருக்களையும் குரு மாணவர்களையும் சந்தித்தார் . மாலையில் இளையோரைச்சந்தித்து உரை நிகழ்த்தினார்.








All the contents on this site are copyrighted ©.