2008-09-06 13:04:05

ரொமானியக் குடியரசுத் தலைவர், திருத்தந்தை சந்திப்பு


செப்.06, 2008. ரொமானியக் குடியரசுத் தலைவர் த்ரையான் பாஷெஸ்குவை இன்று சந்தித்துப் பேசினார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்.

காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் திருத்தந்தையை சந்தித்த பாஷெஸ்கு பின்னர் வத்திக்கானில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனையையும் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்களில் இத்தாலியில் வாழும் ரொமேனியர்களின் வாழ்க்கை முறை, கலாச்சார மத மற்றும் மனித உரிமைகள் இடம் பெற்றன.

கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் குறிப்புப்படி இத்தாலியில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ரொமேனியர்கள் வாழ்கின்றனர்.

நாளை இத்தாலியில் முதல் ரொமேனிய ஆர்த்தோடாக்ஸ் மறைமாவட்டத்தை இத்தாலியில் வாழும் ரொமேனியர்களுக்கெனத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வார் ரொமானியக் குடியரசுத் தலைவர்.

1951 இல் பிறந்த பாஷெஸ்கு, 2007ஆம் ஆண்டு மே 23ம் தேதியிலிருந்து ரொமானியக் குடியரசுத் தலைவராக இருக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.