2008-09-06 13:07:58

ஏறத்தாழ முப்பது இலட்சம் ஆபரிக்கச் சிறார் இறப்பு, நோய், மற்றும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் ஆபத்து- யூனிசெப்


செப்.06, 2008. வறட்சி, உணவுப் பொருட்களின் விலைவாசி ஏற்றம், மோதல்கள் ஆகியவற்றினால் ஏறத்தாழ முப்பது இலட்சம் ஆபரிக்கச் சிறார் இறப்பு, நோய், மற்றும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர் நோக்குகின்றனர் என்று ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் எச்சரித்தது.

எத்தியோப்பியா, சொமாலியா, எரிட்ரியா, கென்யா, உகாண்டா, திஜிபுத்தி ஆகிய நாடுகளில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கோடியே நாற்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் இச் சிறாரும் உள்ளடங்குவர் என்றும் யூனிசெப் ௬றியது.

இந்நாடுகளில் தற்போதைய ஆபத்தான நிலையை அகற்றுவதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லையெனில் இன்னும் இலட்சக்கணக்கான சிறாரும் குடும்பங்களும் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் யூனிசெப் ௬றியது

எத்தியோப்பியாவில் தற்சமயம் 75 ஆயிரம் சிறார்க்குத் தேவைப்படும் வேளை, இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் ௬டும் என்றும் யூனிசெப் எச்சரித்தது.








All the contents on this site are copyrighted ©.