2008-09-04 20:49:32

ஒரிசாவின் பாதிப்புக்களை கத்தோலிக்கத் திருச்சபை ஆய்வு செய்கிறது. 04செப்.-08


கடந்த சில காலங்களில் இப்பொழுது நடந்துவரும் வன்முறையே ஒரிசாவில் மிகவும் மோசமானதாகக் கணிக்கப்படுகிறது . தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை அடையாளமே இல்லாது ஒழித்திடும் முயற்சியில் இறங்கியுள்ளனர் .கடந்த மூன்று நாட்களில் 6 கிறிஸ்தவக் கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன . நூற்றுக்கணக்கான வீடுகள் நொறுக்கப்பட்டுள்ளன . தீய நோக்கோடு நடக்கும் இது ஒரு பேரழிவு என இந்திய ஆயர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர் அருள் தந்தை பாபு ஜோசப் கூறியுள்ளார் . காவலர்கள் அனுமதி மறுப்பதால் பேரழிவுகளைக் கணிக்க இயலவில்லை என அவர் தெரிவித்துள்ளார். உணர்ச்சியற்ற வன்முறைகளால் பெருத்த சேதம் விளைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.