2008-09-03 15:06:08

ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் கலவரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கட்டாக் பேராயர் உச்ச நீதிமன்றத்தில் மனு


செப். 03 ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் கலவரம் குறித்து மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கட்டாக் பேராயர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

மேலும், கந்தமால் மாவட்டத்தின் வன்முறைக்குப் பக்கபலமாக இருக்கும் நிறுவனம் எது என்று கண்டுபிக்கப்படிக்கப்படுவதற்குத் தேசிய மனித உரிமைகள் குழுவைக் கேட்குமாறும் பேராயர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட லக்ஷ்மானந்தா சரஸ்வதியின் அஸ்தியை எடுத்துக் கொண்டு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால், அது மேலும் கலவரத்திற்கு வித்திடும் என்றும், எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்ததார்.

இன்னும் இவ்வன்முறைகளால் சொத்துக்களையும் வீடுகளையும் இழந்துள்ள ஒவ்வொருவருக்கும் 4 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமாறும் பேராயர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷணன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, . கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பதிலளிக்குமாறு ஒரிசா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.