2008-09-03 15:05:12

ஏற்கனவே வன்முறைக்குப் பலியாகியுள்ள ஒரிசா கிறிஸ்தவர்கள் இந்துக்களாக மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் இந்திய ஆயர் பேரவை கவலை


செப். 03 ஏற்கனவே வன்முறைக்குப் பலியாகியுள்ள ஒரிசா கிறிஸ்தவர்கள் இந்துக்களாக மாறுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் மற்றும் நீண்ட காலமாக அவர்கள் வழிபட்டு வந்த அவர்களின் வழிபாட்டுத் தலங்களைத் தாக்கி வருகின்றனர் என்ற செய்திகள் அதிர்ச்சி தருகின்றன என்று இந்திய ஆயர் பேரவை ௬றியது.

இது முற்றிலும் மனிதாபிமானமற்றது மற்றும் இது மனித உரிமைகளை கடுமையாய் மீறுவதாகும் என்றும் இந்திய ஆயர் பேரவை கவலை தெரிவித்தது.

சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துள்ளவர்களுக்கு எதிராய்க் கடும் நடவடிக்கை எடுக்கவும், கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கவும் ஒரிசா முதலமைச்சரை மீண்டும் விண்ணப்பித்துள்ளனர் இந்திய ஆயர்கள்.

இதற்கிடையே, நிலைமை சற்று சீரடைந்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்பட்ட நிலையிலும், திகாபாலி, சரங்கதா உள்ளிட்ட கிராமங்களில் இத்திங்களன்றும் 82 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 2 கிறிஸ்தவர்கள் எரிந்த ஆலயத்தில் சிக்கி இறந்துள்ளனர்.

கந்தமாலில் மட்டுமின்றி ஒரிஸ்ஸாவின் வேறு சில மாவட்டங்களுக்கும் பரவிய இந்த கலவரத்தால், இதுவரை 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 558 வீடுகள், 45 ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள், சமூக மையங்கள், கருணை இல்லங்கள் மற்றும் மருத்துவ மனைகள் தீக்கிரையாகியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.