2008-09-02 15:01:51

ஒரிசா இடம் பெறும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள்


செப்.02 ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு குடியரசுத் தலைவர் தலையிடுமாறு பொதுநிலையினர் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

ஒரிசாவின் கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத், புதுடெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ, இந்திய ஆயர் பேரவை பேச்சாளர் அருட்திரு பாபு ஜோசப், கத்தோலிக்க சட்டத் துறையினர் எனப் பலர் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீலைச் சந்தித்து வேண்டுகோள் மனுவைச் சமர்ப்பித்தனர்.

ஒரிசாவில், காவல் துறை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள போதிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. புதிதாக 4 ஆலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன, இவ்வன்முறைகள் மத்திய பிரதேச மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் பரவியுள்ளதாக ஆசியச் செய்தி நிறுவனம் ௬றியது.








All the contents on this site are copyrighted ©.