2008-09-02 15:06:55

உலக அளவில் 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள் சுத்தமான குடி நீர் வசதியின்றி இருக்கின்றனர்


செப்.02 உலக அளவில் 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள் சுத்தமான குடி நீர் வசதியின்றி இருக்கும் வேளை, அக்குறையை நிவர்த்தி செய்வதற்குப் பெருமலவான முயற்சிகள் தேவை என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் ௬றினார்.

தண்ணீரும் நிலையான வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஸ்பெயினின் சரகோசாவில் கடந்த ஜுன் 14ம் தேதியிலிருந்து நடைபெற்று வரும் எக்ஸ்போ சரகோசா 2008ல் உரையாற்றிய மூன், மில்லேனேய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் நாடுகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்றும் ௬றினார்.

செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ள எக்ஸ்போ சரகோசா 2008ல், 2000த்துக்கு அதிகமான வல்லுநர்கள், தண்ணீர் தொடர்புடைய சொற்பொழிவுகள், கச்சேரிகள், நாடகங்கள் போன்றவைகளை நடத்தி வருகின்றனர். உலகெங்கிலுமிருந்து 65 இலட்சம் பேர் இதைப் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மில்லேனேய வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக சுத்தமான குடி நீர் வசதியின்றி இருக்கும் மக்களின் எண்ணிக்கையை நாடுகள் 2015க்குள் பாதியாகக் குறைப்பதற்கு உறுதியளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.