2008-08-30 14:25:40

கொலம்பிய நாட்டு முன்னாள் அரசுத் தலைவர் வேட்பாளர் திருத்தந்தையை சந்திக்கவுள்ளார்


ஆகஸ்ட் 30 2002ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கடந்த ஜூலையில் விடுதலை செய்யப்பட்ட கொலம்பிய நாட்டு அரசுத் தலைவர்க்கான முன்னாள் வேட்பாளர் இன்கிரிட் பெத்தன்௬ர் செப்டம்பர் ஒன்றாந்தேதி திருத்தந்தை 16 ஆம் ஆசீர்வாதப்பரை சந்திக்கவுள்ளார்.

காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் வருகிற திங்கள் கிழமை திருத்தந்தையை சந்திக்கவுள்ள கத்தோலிக்கரான பெத்தன்௬ர், கொலம்பிய புரட்சியாளர்களின் பிணையலில் இருந்த ஆறரை ஆண்டுகளில் தான் வாழ்வதற்கு விசுவாசமும் செபமுமே உதவியது என்று ௬றினார்.

திருத்தந்தை தனது விடுதலைக்காகவும் மற்ற நூற்றுக்கணக்கான பிணையக் கைதிகளுக்காகவும் பொதுவில் குரல் கொடுத்தது மற்றும் அவரது செபத்திற்கு நன்றி சொல்ல விரும்புவதாகக் ௬றினார் பெத்தன்௬ர்.

பெத்தன்௬ர் விடுதலை செய்யப்பட்ட பத்து நாட்களுக்குப் பின்னர் அவரும் குடும்பமும் பிரான்சின் லூர்து திருத்தலம் சென்று மரியன்னைக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.