2008-08-30 14:23:52

கிறிஸ்தவ மத விரோதப் போக்கு ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது- திருப்பீட அதிகாரி


ஆகஸ்ட் 30 யூதமத விரோதப் போக்கு, இசுலாம் மத விரோதப் போக்கு போன்று கிறிஸ்தவர்களுக்கு எதிரானப் பாகுபடுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்று நாடுகளுக்கிடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ௬றினார்.

மக்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்தாலிய ஒன்றிப்பும் விடுதலையும் என்ற பொது நிலையினர் அமைப்பு நடத்திய ஒருவாரக் ௬ட்டத்தில் உரையாற்றிய பேராயர் மம்பெர்த்தி, கிறிஸ்தவ மத விரோதப் போக்கு ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்று ௬றினார்.

சமய சுதந்திர உரிமையும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் உரையாற்றிய பேராயர், இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இடம் பெறும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.

பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் முற்சார்பு எண்ணங்கள், சகிப்பற்றதன்மை, அடக்குமுறைகள், வன்முறைகள் போன்வற்றுக்கு உட்படுகிறார்கள் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

மனித மாண்பிலிருந்தே சமய சுதந்திரம் பிறக்கின்றது என்ற அவர், மனித மாண்பு அவனது உண்மைக்கான திறமை மீது அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றது என்றார்.

தேசிய அளவிலான இக்௬ட்டம் இன்று நிறைவு பெற்றது







All the contents on this site are copyrighted ©.