2008-08-30 14:30:24

கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் ஒரிசா கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பாராட்டுகிறார்.


ஆகஸ்ட் 30 ஒரிசாவில் கத்தோலிக்கர்கள் கடுமையான வன்முறையை எதிர்கொண்டாலும் அவர்கள் செபத்திலும் இயேசுவின் திருச்சிலுவை மீதான விசுவாசத்திலும் ஆழமான ஈடுபாடு கொண்டுள்ளர்கள் என்று கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் ௬றினார்.

மும்பை பேராயரும் இந்திய இலத்தீன் ரீதி ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் கிராசியாஸ் நிருபர்களிடம் பேசுகையில், இவ்வன்முறைக்கான அடிப்படைக் காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் மற்றும் இத்தகைய வன்முறைகள் வருங்காலத்தில் மீண்டும் இடம் பெறாமலிருக்க செய்ய வேண்டியதை ஆராய வேண்டும் என்றார்.

இந்தியாவில் உரையாடலை ஊக்குவிக்க திருச்சபை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும் உரைத்த மும்பை பேராயர், கிறிஸ்தவம் பரவுவதைத் தடுக்கவே இவ்வன்முறைகள் இடம் பெறுகின்றன என்றார்.

இந்தியாவில் வன்முறை ஒழிக்கப்படுவதற்கென வருகிற செப்டம்பர் 7, ஞாயிறன்று நாடெங்கும் செபம் மற்றும் உண்ணா நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

 








All the contents on this site are copyrighted ©.