2008-08-27 15:29:17

ஒரிசாவில் இடம் பெறும் வன்முறையை எதிர்த்து கத்தோலிக்கப் பள்ளிகள் ஒரு நாள் மூடப்படுகின்றன


ஆகஸ்ட் 27 ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இடம் பெறும் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 29, வருகிற வெள்ளிக்கிழமையன்று அனைத்து கத்தோலிக்க நிறுவனங்களும் மூடப்படும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

கிழக்கு இந்திய மாநிலமான ஒரிசாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக கத்தோலிக்கத் தலத்திருச்சபை வருகிற செப்டம்பர் ஏழாம் தேதியன்று செபம் மற்றும் நோன்பு நாள் கடைபிடிக்கும் என்றும் இந்திய ஆயர் பேரவை நேற்று புதுடெல்லியில் நிருபர் ௬ட்டத்தில் ௬றியது.

கிறிஸ்தவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதை வன்மையாய் எதிர்க்கும் விதமாக நாடெங்கும் அமைதி ஊர்வலங்களை நடத்துமாறும் அனைத்து கத்தோலிக்கக் குழுக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் வர்க்கே விதயாத்தில்.

கருணை இல்லங்கள், கன்னியர் இல்லங்கள் குருக்களின் பங்கு இல்லங்கள் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. அனாதைச் சிறாரைத் தாக்க வந்த சமயம் அதைத் தடுக்க முயன்ற 22 வயது பெண் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளாள்.

இந்து தீவிரவாதக் கும்பல்களின் இத்தாக்குதல்களுக்குப் பயந்து பல குருக்களும் அருட்சகோதரிகளும் காடுகளுக்குச் சென்றுள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.