2008-08-26 15:53:56

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது குறித்து கண்டனம்


ஆகஸ்ட் 26 ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்த அதேவேளை இத்தகைய குற்றங்கள் நிறுத்தப்பட அரசு அதிக முயற்சிகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் பாக்தாத் இலத்தீன் ரீதி பேராயர் ஜான் ஸ்லைமான்.

எண்ணற்ற கடத்தல்கள் இடம் பெறுவது குறித்த தகவல்கள் தனக்கு வருவதாகவும் இவற்றில் பெரும்பாலான கடத்தல்கள் பிணையத் தொகை கேட்டு இடம் பெறுவதாகவும் பேராயர் ஜான் ௬றினார்.

பிரிட்டன் பிறரன்பு அமைப்பு ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், தொடர்பு சாதனங்கள் இதனை மறப்பதாகவும் கடத்தப்பட்டுள்ள 19 வயது இளம் பெண்ணை மீட்பதற்கு 20 ஆயிரம் டாலர் பிணையத் தொகை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈராக்கில் 2003ல் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையிலான ஆக்ரமிப்பு தொடங்கியதிலிருந்து கிறிஸ்தவர்கள் கடத்தப்படுவது தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆயர்களும் குருக்களும் கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் கொல்லப்பட்டுள்ளனர்.

 








All the contents on this site are copyrighted ©.