2008-08-25 12:58:09

உலகில் அதிகரித்து வரும் பதட்ட நிலைகள் மிகுந்த கவலை தருகின்றன- திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட


ஆகஸ்ட் 25 உலகில் அதிகரித்து வரும் பதட்ட நிலைகள் மிகுந்த கவலை தருகின்றன என்றுரைத்த அதேவேளை, வன்முறைகள் புறக்கணிக்கப்பட்டு சட்ட விதிமுறைகளின் நன்னெறி வலுப்படுத்தப்படுமாறு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை. RealAudioMP3

ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, தேசியவாத முரண்பாட்டு சூழல்கள் வரலாற்றின் பல தருணங்களில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கினறன என்றார்.

உலகில் அண்மையில் இடம் பெற்றுள்ள பதட்ட நிலைகள் பலருக்குக் கடந்த காலத்தை நினைவுப்படுத்துகின்றன, எனினும் நாம் நம்பிக்கை இழக்காமல் இன்றைய மற்றும் வருங்காலத் தலைமுறைகள் நல்லிணக்கத்துடன் வாழவும் ஒழுக்க நெறியில் முன்னேறவும் உதவும் பலனுள்ள மற்றும் நேர்மையான உறவுகளை அமைத்துக் கொடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

தற்சமயம் உலகில் ஜார்ஜியா, தென் ஒசேட்டியா, அப்காசியா ஆகிய பகுதி மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், காஷ்மீர் குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே இடம் பெறும் பிரச்சனைகள், திபெத் குறித்து சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையே நிலவும் பிரச்சனைகள், இன்னும் ஆப்ரிக்கா, மத்திய கிழக்குப் பகுதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவைகளை திருத்தந்தை மனத்தில் வைத்து இவ்வாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்று ஊடகங்கள் ௬றுகின்றன.








All the contents on this site are copyrighted ©.